தமிழ் அரசியல் கைதிகளுக்கு அச்சுறுத்தல்- பிரதேச சபையில் கண்டனப் பிரேரணை நிறைவேற்றம்!

சிறைச்சாலைகள் இராஜாங்க அமைச்சர் சிறைச்சாலைக்குச்சென்று, தமிழ் அரசியல் கைதிகளை அச்சுறுத்தியமைக்கு எதிராக கரைதுறைப்பற்று பிரதேச சபையில் கண்டனப் பிரேரணை நிறைவேற்றப்பட்டது.

நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற கரைதுறைப்பற்று பிரதேச சபையின் அமர்விலேயே இந்த கண்டனப் பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது.

கரைத்துறைப்பற்று பிரதேச சபையின் தவிசாளர் கமலநாதன் விஜிந்தன் கொண்டுவந்த இந்த தீர்மானம், ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

இதேவேளை கொக்குத்தொடுவாய் பகுதியில் இடம்பெறுகின்ற காணி அபகரிப்புகள்  மற்றும் உடல்களை தகனம் செய்வதற்காக முள்ளியவளை பகுதியில் மின் தகன மையம் அமைக்கும் நடவடிக்கை ஆகியவை தொடர்பிலும் பிரேரணை நிறைவேற்றப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *