ஹம்பாந்தோட்டை சுச்சி தேசிய பாடசாலையின் விஞ்ஞான ஆய்வு கூடத்தில் புகுந்து பொருட்களை திருடியமை தொடர்பாக அப்பாடாசலையின் உயர்தர மாணவர்கள் மூன்று பேர் மற்றும் அப்பொருட்களை வைத்திருந்த ஒருவரையும் ஹம்பாந்தோட்டை பொலிசார் நேற்று வியாழக்கிழமை கைது செய்துள்ளனர்.
ஹம்பாந்தோட்டையிலுள்ள சிரிபோபுர, சதகிரணகம பகுதிகளை சேர்ந்த 19 வயதுடைய மூன்று மாணவர்களும், மயூரபுரவில் வசிக்கும் 42 வயதான சந்தேகநபரும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் கடந்த 4 ம் திகதி பாடசாலை ஆய்வகத்திற்குள் புகுந்து அதன் சொத்தை திருடியதற்காக மூன்று மாணவர்களும் மற்ற சந்தேக நபரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்தோடு மூன்று மாணவர்கள் உட்பட மற்றைய சந்தேக நபர் இன்று வெள்ளிக்கிழமை நீதிமன்றத்தில் முன்னிழலைப்படுத்தப்பட உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.






