சுந்தரா டிராவல்ஸ்’ திரைப்படத்தின் இரண்டாம் பாகம் எப்போது? வெளியான தகவல்

நடிகர் முரளி மற்றும் வடிவேலு நடிப்பில் வெளியாகிய “சுந்தரா டிராவல்ஸ்” திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த திரைப்படத்தின் இரண்டாவது பாகத்தில் வடிவேலு கதாபாத்திரத்தில் யோகி பாபு நடிக்கவுள்ளதாகவும், முரளி நடித்த கதாபாத்திரத்தில் கருணாகரன் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

முதல் பாகத்தை போன்று இரண்டாவது பாகமும் நகைச்சுவை நிறைந்த படமாக உருவாகும் எனக் கூறப்படுகிறது.

Advertisement

இது குறித்த உத்தியோகப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply