
யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் ஐக்கிய அமெரிக்க பழைய மாணவர்களின் ( துயககயெ ஆநனiஉயட குயஉரடவல ழுஎநசளநயள யுடரஅini – ருளுயு) நிதிப் பங்களிப்புடன்இ மருத்துவ பீட பழைய மாணவர்களால் யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீடதத்துக்குக் கையளிக்கப்பட்ட தகவல் தொழில் நுட்ப கூடத்தின் திறப்பு விழா இன்று வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்றது.
யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீடாதிபதி வைத்தியக் கலாநிதி இ. சுரேந்திரகுமாரன் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா தகவல் தொழில் நுட்ப கூடத்தைத் திறந்து வைத்தார்.
முன்னாள் மருத்துவ பீடாதிபதியும்இ சத்திர சிகிச்சை நிபுணருமான பேராசிரியர் எஸ். ரவிராஜ்இ மருத்துவ பீட விரிவுரையாளர்கள்இ முன்னாள் மாணவர்கள் உட்படப் பலர் நிகழ்வில் கலந்து கொண்டனர்.
நாட்டின் தற்போதைய கொவிட் 19 சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டுஇ சுகாதார அறிவுறுத்தல்களுக்கமைய நடைமுறைகள் பின்பற்றப்பட்டு இந்த நிகழ்வு மிகவும் குறைந்தளவானர்களுடன் ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது.





