அரிசி மீதான கட்டுப்பாட்டு விலை வர்த்தமானி அறிவிப்பை மீள் திருத்தம் செய்ய தீர்மானித்துள்ளதாக நுகர்வோர் பாதுகாப்பு கூட்டுறவு அமைச்சு தெரிவித்துள்ளது
நாட்டு அரிசியின் கட்டுப்பாட்டு விலையை திருத்தாமல் சம்பா மற்றும் கீரி சம்பா அரிசியின் கட்டுபாட்டு விலைகளே இவ்வாறு மீள் திருத்தம் செய்ய முடிவு செய்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன்படி, சம்பா அரிசியின் கட்டுப்பாட்டு விலையை ஒரு கிலோவுக்கு ரூ .103 லிருந்து ரூ .120 ஆக உயர்த்தவும், கீரி சம்பாவின் கட்டுப்பாட்டு விலையை ரூ .125 லிருந்து ரூ .145 ஆக அதிகரிக்கவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது என நுகர்வோர் பாதுகாப்பு கூட்டுறவு அமைச்சு தெரிவித்துள்ளது






