
தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலுக்கு மட்டு.நீதிமன்று தடை!
தியாகதீபம் திலீபனின் நினைவேந்தலுக்கு, மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றம், நேற்றுமுன்தினம் தடைஉத்தரவு பிறப்பித்துள்ளது.
“தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினரான திலீபனின் நினைவேந்தல் 15ஆம் திகதி (நேற்றுமுன்தினம்) தொடக்கம் எதிர்வரும் 26ஆம் திகதிவரை மேற்கொள்ளப்படவுள்ளதாக பொலிஸ் நிலைய புலனாய்வு உத்தியோகத்தர்களால் நம்பகரமான தகவல் கிடைத்துள்ளது.
இவ்வாறான நிகழ்வு நடந்தால் இதற்கு எதிரானவர்கள், எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபடவாய்ப்பு உள்ளது.
அதுமட்டுமன்றி, நாட்டில் கொரோனா நோய்த் தாக்கம் அதிகரித்துள்ளதால், அதைக் கட்டுப்படுத்தும் முகமாக சுகாதார நடவடிக்கையை நாட்டு மக்கள் கடைப்பிடிக்க வேண்டிய அவசியம் காணப்படுகின்றது. எனவே, இவ்வாறான நினைவேந்தல் நடவடிக்கைக்கு நீதிமன்று தடை உத்தரவு பிறப்பிக்கவேண்டும்” என்று காத்தான்குடி பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி கஜநாயக்கா மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் விண்ணப்பித்தார்.
அதனை ஏற்றுக்கொண்ட நீதிமன்று, நினைவேந்தலுக்கு, பொலிஸார் கோரியபடி தடை உத்தரவு விதித்து கட்டளை பிறப்பித்தது.





