கோறளைப்பற்று அபிவிருத்தி குழுக்கூட்டத்தில் ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுப்பு!

கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்தின் அபிவிருத்தி குழுக்கூட்டம் இன்று வெள்ளிக்கிழமை செயலகக் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்தின் பிரதேச அபிவிருத்தி குழுக்கூட்டம் நாடாளுமன்ற உறுப்பினரும், பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான ஹாபிஸ் நசீர் அஹமட் தலைமையில் நடைபெற்றது.

இக்கலந்துரையாடலில், அபிவிருத்தி சம்பந்தமாக மீளாய்வு செய்யப்பட்டதோடு, 2022 ஆம் ஆண்டு தேசிய வரவு, செலவுத் திட்டத்திற்கான முன் மொழிவுகள் சம்பந்தமாக ஆராயப்பட்டது.

இக் கூட்டத்திற்கு ஊடகவியலாளர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை, தொடர்ச்சியாக சிலகாலமாக அனுமதி மறுக்கப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

இதில், கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக செயலாளர் எஸ்.எச்.முஸம்மில், உதவி பிரதேச செயலாளர் ரம்ஷியா, உதவி திட்டமிடல் பணிப்பாளர் எம்.ருவைத், பிரதேச சபை செயலாளர் எஸ்.சிஹாப்தீன் மற்றும் உயர் அதிகாரிகள், அரச திணைக்கள அதிகாரிகள், நிறுவனங்களின் தலைவர்கள், ஊர் பிரமுகர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *