
விடுதலைப் புலிகள் தயாரித்த குண்டுகள் குடமியனில் மீட்பு!
உள்ளூர்த் தயாரிப்பு வெடிகுண்டுகள் சில வரணி, குடமியன் பகுதியில் நேற்று பொலி ஸாரால் மீட்கப்பட்டன. ஆட்களற்ற காணியுடனான சிறிய குளம் ஒன்று அங்கு உள்ளது. அதனுடன் இணைந்ததாகப் பற்றைக்காடு காணப்படுகின்றது.
அதில் வெடிகுண்டுகள் காணப்படுகின்றன என்று பொதுமகன் ஒருவர் கொடிகாமம் பொலிஸாருக்குக் கூறியுள்ளார்.அதனையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார், 15 கிலோகிராம் மற்றும் 10 கிலோகிராம் நிறையுடைய உள்ளூர் தயாரிப்பான குண்டுகளை மீட்டனர்.





