பெண்களை தவறான தொழிலுக்கு விளம்பரப்படுத்திய மற்றுமொரு இணையதளம்

பெண்கள் மற்றும் சிறுமிகளை விற்பனை செய்வதற்காக இணையதளமொன்றை நடத்தி வந்த சந்தேகநபரொருவர் குற்ற விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார் எனப் பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

15 வயதுடைய சிறுமியொருவரை தகாத தொழிலுக்காக விற்பனை செய்தமை மற்றும் இணையதளங்களில் விளம்பரங்கள் காட்சிப்படுத்தப்பட்டமை தொடர்பான விசாரணைகள் சிறுவர் மற்றும் மகளிர் குற்ற விசாரணைப் பிரிவினரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

குறித்த விசாரணைகள் மூலம், நேற்று குற்ற விசாரணைப் பிரிவினரால் இரத்தினபுரி – கலவான பிரதேசத்தில் இவ்வாறான இணையதளம் தொடர்பில் சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும், இந்த விசாரணையில் இதுவரை 46 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *