கொரோனா தாக்கம்- திருமலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம்

இளைஞர் அபிவிருத்தி அகம் நிறுவனத்தின் ஏற்பாட்டில் கெல்விட்டாஸ் நிறுவனத்தின் நிதி அனுசரணையில் வழங்கப்பட்ட இந்நிவாரணப்பணியில் மூதூர் பிரதேச செயலகபிரிவில் மூவினங்களையும் சார்ந்த 110குடும்பங்களுக்கு வழங்கப்பட்டன.

ஆரம்ப நிகழ்வு மூதூர் பிரதேச செயலாளர் எம். முபாரக் தலையில் பிரதேச செயலகத்தில் நடைபெற்றது. இதனையடுத்து மூதூர், கிளிவெட்டி, சேனையூர், கடற்கரைச்சேனை, நாவலடி போன்ற பகுதிகளைச்சார்ந்த மிகவும் வறிய பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்ன.

அகம் நிறுவன இணைப்பாளர், பொ. சற்சிவானந்தம், பொருளாளர் ம. உமாசங்கர் ஆகியோரின் தலமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கெல்விட்டாஸ் அமைப்பின் திட்ட அதிகாரி திரு. சக்தி, பிரதேச செயலாளர், திட்டமிடல் பணிப்பாளர், கிராம சேவகர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர் கள், அகத்தின் திட்ட அதிகாரி களான சாரங்க்கன், வி. மோகன் மற்றும் இளைஞர் களும் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *