
இலங்கைக்கு சுனாமி எச்சரிக்கை!
இந்தோனேசியாவைச் சுற்றியுள்ள பகுதியில் ஏற்படக்கூடிய பூகம்பம் காரணமாக இலங்கையில் சுனாமி ஏற்பட வாய்ப்பு உள்ளது என்று சிரேஷ்ட பூகம்பம் தொடர்பான நிபுணர் நில்மினி தல்தென தெரிவித்துள்ளார்.
இலங்கையில் பூகம்பம் ஏற்படக்கூடிய அபாயம் இல்லை. எனினும் பூகம்பம் காரணமாக சுனாமி ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது. அதனை எதிர்கொள்ளத் தேவையான முன்னாயத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.





