
அனுமதியின்றி மணல் அகழ்வு டிப்பர் வாகனச் சாரதி கைது!
அனுமதிப்பத்திரம் இன்றி மணல் ஏற்றிசென்ற டிப்பர் வாகனமும் அதன் சாரதியும் பளை பொலிஸாரால் கைது செய்ய்பட்டுள்ளனர்.
பளை பொலிஸார் இயக்கச்சி பகுதியில் நேற்றுமுன்தினம் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது அனுமதிப்பத்திரம் இன்றி மணல் கொண்டு சென்ற டிப்பர் வாகனத்துடன் அதன் சாரதி கைது செய்யப்பட்டார்.
சந்தேக நபரும், சான்றுப்பொருள்களும் நீதிமன்றில் பாரப்படுத்துவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.





