நாட்டில் மதுபானசாலைகள் மற்றும் பியர் போத்தல் மற்றும் கொள்கலன்களை விற்பனை செய்யும் கடைகள் இன்று வெள்ளிக்கிழமை (17) முதல் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது என கலால் திணைக்களம் அறிவித்துள்ளது.
இந்நிலையில், யாழ்ப்பாணம் கே.கே.எஸ் வீதி மற்றும் மானிப்பாயில் உள்ள மதுபான சாலைகளில் மதுப்பிரியர்கள் பலர் ஒன்றுகூடி, நீண்ட வரிசையில் காத்திருப்பதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இதன் காரணமாக, அவ் இடத்திற்கு விரைந்த அங்கு இராணுவத்தினர் அங்கு கூடியவர்களை கலைத்ததுடன், மதுபானசாலையும் பூட்டிச் சென்றுள்ளனர்.
இதேவேளை, இன்று மதுபானசாலைகளை திறக்க அனுமதியளித்த நிலையில் கொரோனா அச்சத்திற்கு மத்தியிலும் மதுபான போத்தல்களை வாங்குவதற்காக பல்வேறு இடங்களிலும் மதுபிரியர்கள் முண்டியடித்து சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.






