அம்பாந்தோட்டை பிரதேசமொன்றில், வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த மனைவி குழந்தைகளை யானையொன்று தாக்க வந்த நிலையில், அவர்களை காப்பாற்றுவதற்காக யானையின் முன் பாய்ந்த தந்தை ஒருவர் பலத்த காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் .
குறித்த சம்பவம், அம்பாந்தோட்டை நாகர்வெவ பகுதியில் நடைபெற்றுள்ளது.
அம்பாந்தோட்டை – நாகர்வெவ குருளு உயன கிராமத்தில் வசிக்கும் 35 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தந்தையான அனுர என்பவரே இச்சம்பவத்திற்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக அவரது மனைவி தெரிவிக்கையில்,
எங்களுடைய குடும்பம் இதற்கு முன் கண்ணொருவ பிரதேசத்தில் வசித்து வந்தோம்.
ஆனால், இந்த இடம் யானைகள் பாதுகாப்பு முகாமை தொகுதிக்கு உட்பட்டது என எங்களுக்கு இந்த இடத்தை தந்தனர்.
ஒவ்வொரு நாளும் இந்த இடத்திற்கு யானைகள் வருவதால் இரவில் தூங்காமல் யானைகளை விரட்டுவது வழமையாகிவிட்டது.
அதேபோல், இன்று காலை நாங்கள் தூங்கிக் கொண்டிருந்த வேளை, யானை ஒன்று எமது வீட்டு வேலியில் தாக்கும் சத்தத்தை கேட்டு எனது கணவர் வெளியில் சென்றார்.
பின், வீட்டுச் சுவரை தாக்கும் போது எங்களை வெளியே செல்லுமாறு கூறிவிட்டு யானையின் தும்பிக்கையில் பாய்ந்து யானையை தடுத்து எங்களைக் காப்பாற்றினார்.
எம்மை காப்பாற்ற முற்றப்பட்டதில், யானை அவரை மிதித்து கால், கை எலும்புகள் உடைந்து பலத்த காயங்களுக்கு உட்பட்ட நிலையில் , வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார் என கவலையாக தெரிவித்தார்.






