ஆசிரியர்களுக்கு விடுக்கப்படும் அச்சுறுத்தல் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்படும்!

கற்பித்தல் செயற்பாடுகளை நிறுத்துமாறு எவரேனும் அச்சுறுத்தல் விடுக்கும் பட்சத்தில் முறைப்பாடு செய்யுமாறு Online ஊடாக கற்பித்தலில் ஈடுபடும் பாடசாலை ஆசிரியர்களுக்கு பொலிஸார் ஆலோசனை வழங்கியுள்ளனர்.

அதனடிப்படையில், குற்றப்புலனாய்வு திணைக்களம் (CID), 119 எனும் அவசர தொலைபேசி இலக்கத்தின் ஊடாக அல்லது அருகிலுள்ள பொலிஸ் நிலையங்களில் முறையிட முடியும் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

கிடைக்கும் முறைப்பாடுகள் தொடர்பில் விரைந்து சட்ட நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் கலாநிதி சரத் வீரசேகர, பொலிஸ்மா அதிபர், குற்றப்புலனாய்வு திணைக்களம், பிரதி பொலிஸ்மா அதிபருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

அரச ஊழியர்களின் நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவிக்கின்றமை மற்றும் அச்சுறுத்தல் விடுக்கின்றமை குற்றமாகும் என்பதால், அவ்வாறான நபர்களுக்கு எதிராக விசேட கவனம் செலுத்தப்படுவதாக பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *