திருகோணமலையில் எதிர்வரும் 22ஆம் திகதி பிரதான நீர் வழங்கல் குழாயில் ஏற்பட்டுள்ள திருத்த வேலைகாரணமாக நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர்வழங்கல் வடிகால் அமைப்பு சபை அறிவித்துள்ளது.
அந்தவகையில் கந்தளாய், கிண்ணியா, தம்பலகாமம், குச்சவெளி ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் இத்தடை ஏற்படவுள்ளதாகவும், 23 ஆம் திகதி மட்டுப்படுத்தப்பட்ட அளவில் நீர் விநியோகம் இடம்பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, திருகோணமலை நகர் பகுதிகளிலும் கடந்த மூன்று தினங்களாக நீர் பற்றாக்குறை காணப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.





