
கல்வி அமைச்சுக்கும் அதிபர், ஆசிரியர் தொழிற் சங்கங்களுக்கும் இடையில் நேற்று நடைபெற்ற பெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
குறித்த பேச்சுவார்த்தை தொடர்பில் ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவித்தபோதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
தமது பிரச்சினை தொடர்பாக முழுமையான தீர்வு எட்டப்படும்வரை தொழிற்சங்க நடவடிக்கையை கைவிடப்போவதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.





