
கொழும்பு – கொம்பனித்தெரு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பிரதேசத்தில் அமைந்துள்ள வீடொன்றில் இளைஞர் ஒருவர் வீட்டுத் திருத்த வேலையில் ஈடுபட்டு கொண்டிருந்த போது நிலத்தில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை (08) குறித்த இளைஞர் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
கொம்பனித்தெரு, மஸ்ஜித் வீதி பகுதியில் அமைந்துள்ள வீட்டின் கூரை திருத்த வேலையில் ஈடுபட்டு கொண்டிருந்த போதே குறித்த இளைஞர் இவ்வாறு நிலத்தில் தவறி விழுந்துள்ளார்.
காயமடைந்த நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் 22 வயதுடைய இந்திய பிரஜை ஒருவர் என்றும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
குறித்த இளைஞர் கொழும்பில் உள்ள நிறுவனமொன்றில் தொழில் புரிந்து வந்துள்ளார்.
கொம்பனித்தெரு பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.