
வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு மற்றும் சந்தை பல்வகைப்படுத்தல் இராஜாங்க அமைச்சர் பதவியில் இருந்து பியங்கர ஜயரத்ன விலகுவதாக தெரிவித்திருந்தார்.
இதை தொடர்ந்து, அவர் வழங்கிய இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஏற்க மறுத்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.