சிறப்பாக இடம்பெற்ற ஹஜ் பெருநாள் தொழுகை!

இஸ்லாமியர்களினால் ஹஜ் பெருநாள் இன்று(புதன்கிழமை) வவுனியாவில் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

வவுனியா பட்டாணிசூர் முகைதீன் ஜூம்மா பெரியபள்ளிவாசலில்  மௌலவி ஏம்.அமீனுதீன் தலைமையில் தொழுகை இடம்பெற்றது.

இதன்போது கொரோனா பரவல் காரணமாக மட்டுப்படுத்தப்பட்ட இஸ்லாமியர்கள் கலந்துகொண்டு சுகாதார விதிமுறைகளை பேணியவாறு வழிபாடுகளில் ஈடுபட்டனர்.

அதேபோன்று மன்னார் மாவட்டத்திலுள்ள இஸ்லாமிய மக்களும் இன்றைய தினம் பெருநாளை கொண்டாடி வருகின்றனர்.

மன்னார் மூர்வீதி ஜும்மா பள்ளிவாசலில் இன்றைய தினம் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகைகள் இடம்பெற்றது. காலை 6.45 மணிக்கு பெண்களுக்கும் காலை 7.30 மணியளவில் ஆண்களுக்கும் பெருநாள் தொழுகை இடம் பெற்றது.

மூர்வீதி ஜும்மா  பள்ளிவாசலின் மௌலவி எம்.அஸீம் தலைமையில் தொழுகை நடைபெற்றது.

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மக்கள் பாதுகாக்கப்பட வேண்டியும் விசேடமாக துவா தொழுகைகள் இடம் பெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *