கொழும்பு, ஏப் 11
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகளுக்கு தீர்வு காணும் வகையில் பொதுமக்கள் அரசாங்கத்துக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் காலி முகத்திடலில் 3ஆவது நாளாகவும் கொட்டும் மழையைப் பொருட்படுத்தாது மக்கள் போராட்டத்தை முன்னெடுத்து வரும் நிலையில் திருமணமான புதுத்தம்பதிகளும் போராட்டத்தில் இணைந்துள்ளது அனைவரது கண்களையும் ஒரு கணம் நோக்க வைத்துள்ளது.

