வேலைநிறுத்தப் போராட்டத்தில் பங்குப்பற்றாமல் இணையவழி ஊடாக கற்பித்தல் செயற்பாடுகளை முன்னெடுக்கும் ஆசிரியர்களுக்கு அச்சுறுத்தல்கள் விடுக்கப்படுமாயின் அவை தொடர்பில், உடனடியாக முறையிடுமாறு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
அவ்வாறு யாராவது அச்சுறுத்தல்களை விடுப்பார்களாயின் 118 அல்லது 119 என்ற இலக்கங்களுக்கு தொடர்பு கொண்டு முறைப்பாடு செய்யுமாறும் அரசாங்கத் தகவல்கள் திணைக்களம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






