மணல் அகழ்வை தடுத்து நிறுத்த கோரி ஆர்ப்பாட்டம்

திருகோணமலை மாவட்டம் வெருகல் பகுதியில் உள்ள மாவடிச்சேனை நாதன் ஓடையில் இடம்பெறும் மணல் அகழ்வைத் தடுத்து நிறுத்துமாறு வழியுறுத்தி மணல் அகழ்வு இடம்பெறும் நாதன்ஓடை அணைக்கட்டில் பொதுமக்கள் இன்று (17) வெள்ளிக்கிழமை கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இவ் மணல் அகழ்வினால் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு வயல் நிலங்களும் குடியிருப்பு பகுதிகளில் மூழ்கடிக்கப்படுவதாகவும் கவலை தெரிவிக்கின்றனர்.

மணல் அகழ்வால் உடைப்பெடுக்கும் குறித்த ஓடையினால் குடியிருப்பு பகுதியை விட்டும் பாடசாலைகளில் இடம் பெயர வேண்டி உள்ளதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *