
கலையரனுக்கு வழங்கிய தேசியப்பட்டியல் பிரதிநித்துவத்தை மாற்றுவது என்பது வதந்திமட்டுமே உண்மை இல்லை! பா.அரியநேத்திரன் மு.பா.உ,

தமிழ்தேசிய கூட்டமைப்பு மூலமாக கடந்த 2020, பொதுத்தேர்தலின் பின்னர் அம்பாறை மாவட்டத்தில் தமிழ்தேசிய கூட்டமைப்பு சார்பாக வேட்பாளராக நியமிக்கப்பட்ட தவராசா கலையரசனுக்கு வழங்கப்பட்ட தேசிய பட்டியல் நியமனத்தை மீளப்பெறுவது தொடர்பாக வெளிவந்த செய்திகள் வதந்திகளே அன்றி அது உண்மையில்லை என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், இலங்கை தமிழரசு கட்சி ஊடக செயலாளரும், பட்டிருப்பு தொகுதி இலங்கை தமிழரசு கட்சி தலைவருமான பா. அரியநேத்திரன் தெரிவித்தார்.
இன்றய கல்முனை நெற் பரிணாமம் பத்திரிகையில் வெளிவந்த செய்தி தொடர்பாக மேலும் கருத்து கூறுகையில்.
ஒருபத்திரிகையில் வதந்திகளை செய்திகளாக வெளியிட்டுள்ளதை ஏற்கமுடியாது முகநூலிலும் சமூகவலைத்தளங்களிலும் வேண்டுமென திட்டமிட்டு ஆதாரமில்லாமல் பதிவிடுவதை செய்திகளாக பொறுப்புவாய்ந்த ஊடகங்கள் வெளியிடுவது ஆரோக்கியமான ஊடக தர்மமாகாது.
இது உண்மைக்குப் புறம்பாக ஒரு முகநூல் பதிவு மட்டுமே.!
தேசியபட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக தமிழ்தேசிய கூட்டமைப்பால் மட்டுமல்ல அதற்கு முன்னர் தமிழர் விடுதலை கூட்டணியால் கூட தேசிய பட்டியல் நியமனம் பெற்ற எவரும் இடைநடுவில் அவர்களின் பதவியை மீளப்பெற்ற வரலாறுகள் இல்லை! வழங்கப்பட்ட தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் உயிர் நீத்த சம்பவங்களில் மட்டுமே அந்தபதவி இன்னொருவருக்கு மாற்றப்பட்ட வரலாறுகள் உள்ளன. மற்றப்படி நியமித்தவர் பாராளுமன்ற ஆயுள்காலம்வரை தொடர்ந்த வரலாறுகளே உள்ளன.
எந்த ஒரு மக்களால் தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினரோ, அல்லது தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினரோ பதவி விலகுவதாக இருந்தால் அவரின் சுய விருப்பின் பெயரில் நேரடியாக பாராளுமன்ற செயலாளர் நாயகத்துக்கு முன்பாக பதவி விலகல் கடிதத்தில் கையொப்பம் இடப்பட்டு பாராளுமன்ற செயலாளர் நாயகத்திக்கு கையளிக்கப்படவேண்டும் இதுவே பாராளுமன்ற நடைமுறை விதியாகும் அவ்வாறு இல்லாமல் ஒரு பாராளுமன்ற உறுப்பினர் பதவி விலக முடியாது!
மிகமுக்கியமான இன்னொன்று
கௌரவ கலையரசன் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக நியமித்தமை தொடர்பாக 2020, ஆகஷ்ட்,29 ல் இலங்கை தமிழரசு கட்சி மத்திய குழு கூட்டம் வவுனியாவில் இடம்பெற்ற போது அம்பாறை மாவட்டத்தில் தவராசா கலையரசனை தேசியபட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக நியமித்ததை ஏகமனதாக ஏற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கலையரசனுக்கு தேசியபட்டியல் நியமனம் வழங்கியதை எவரும் எதிர்க்கவில்லை, ஆனால் அவருக்கு தேசியபட்டியல் நியமனத்தை ஏற்கனவே பொதுச்செயலாளராக பதவியில் இருந்த கி.துரைராசசிங்கம் வழங்கும்போது இலங்கை தமிழரசு கட்சி தலைவர் மாவை சேனாதிராசாவிடம் தெரியப்படுத்தவில்லை என்ற குற்றச்சாட்டும் அது தொடர்பான வாதப்பிரதிவாதமங்களும் மட்டுமே இடம்பெற்றது. இறுதியில் தவராசா கலையரசனுக்கு வழங்கப்பட்ட தேசியபட்டியல் நியமனத்தை இலங்கை தமிழரசு கட்சி மத்திய செயற்குழு ஏகமனதாக ஏற்றுக்கொண்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
எனவே இலங்கை தமிழரசு கட்சியின் மத்திய குழு தீர்மானம் இன்றி தேசியப்பட்டியல் பதவியை இன்னொருவருக்கு மாற்றமுடியாது!
தேசியப்பட்டியல் வடக்கு கிழக்கு மகாணத்தில் உள்ள ஐந்து மாவட்டங்களிலும் தமிழ்தேசிய கூட்டமைப்புக்காக மக்கள் அளித்த வாக்குகளின் அடிப்படையில் வழங்கப்படும் பதவி என்பது உண்மை.
தமிழ்தேசிய கூட்டமைப்பில் மூன்று கட்சிகள் அங்கம் வகிக்கின்றன மூன்று கட்சிகளும் தவராசா கலையரசனுக்கு வழங்கப்பட்ட தேசிய பட்டியல் பாராளுமன்ற நியமனத்தை அவருக்கு வழங்கிய பின்னர் எக்காரணம் கொண்டும் எதிர்க்கவில்லை ஆட்சேபனைகளையும் தெரிவிக்கவில்லை.
விகிதாசார தேர்தல் முறையில் ஐந்து மாவட்டங்களிலும் தமிழ்தேசிய கூட்டமைப்பு வேட்பாளர்களாக நிறுத்தப்பட்ட அனைவரின் முயற்சியாலும், அவர்களின் பிரசாரங்களாலும், அவர்களின் செல்வாக்காலுமே மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் விருப்பு வாக்கில் தெரிவு செய்யப்படுவாது வழமை விருப்பு வாக்கில் தெரிவு செய்யப்படாதவர்கள் தாங்கள் தெரிவாகாவிட்டாலும் தமது கட்சி வெற்றிக்கு உழைத்தவர்களே அன்றி அவர்கள் நிராகரிக்கப்பட்டவர்கள் இல்லை அதன் அடிப்படையில் 2020, பொதுத்தேர்தலில் இம்முறை பத்து பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவானார்கள் விகிதாசார தேர்தல் முறையில் கூட்டுமுயற்சிகளே கட்சியின் வெற்றியை தீர்மானிக்கின்றதே அன்றி தனிநபர் முயற்சிகள் இல்லை எனவும் மேலும் கூறினார்.





