உக்ரைனின் வான் பாதுகாப்பு அமைப்புகளை அழித்துள்ளதாக ரஷ்யா அறிவிப்பு!

உக்ரைனின் வான் பாதுகாப்பு அமைப்புகளை அழித்துள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.

தங்களது தரைப் படையினருக்கு வான்வழியாகப் பாதுகாப்பு கொடுப்பதில் ஏற்பட்ட தோல்வியையடுத்து இந்த நடவடிக்கையை ரஷ்யா மேற்கொண்டுள்ளது.

இந்த வான் பாதுகாப்பு அமைப்புகளை உக்ரைனுக்கு ஸ்லோவேகியா அளித்ததாகத் தெரியவந்துள்ள நிலையில், அந்த வான் பாதுகாப்பு அமைப்புகள் தாக்கப்பட்டதற்கான ஆதாரம் இல்லை என அந்த நாடு தெரிவித்துள்ளது.

டினிப்ரோ என்ற இடத்தில் இந்த வான் பாதுகாப்பு அமைப்புகளை அழித்ததாக ரஷ்ய இராணுவம் கூறியுள்ளது.

ஏற்கெனவே இதுபோன்ற வான் பாதுகாப்பு அமைப்புகளை மிகோலாய், கார்கிவ் பிராந்தியங்களிலும் அழித்ததாக ரஷ்யா முன்னர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், கிழக்கு நகரங்கள் மீது ரஷியா மீண்டும் விரைவில் தாக்குதலை தொடங்கலாம் என்று உக்ரைன் பாதுகாப்புத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

ரஷ்யாவை ஒட்டியுள்ள உக்ரைனைனின் கிழக்கு நகரங்களான கார்கீவ், லுஹன்ஸ்க், டுனெட்ஸ்க், டுநிப்ரோபர்டிவ், ஷபோரிஷஷியா, டான்புரோ, மரியபோல் ஆகிய நகரங்கள் மீது ரஷியா விரைவில் மீண்டும் தாக்குதல் நடத்தலாம் என உக்ரைன் பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *