ஆபத்தான மின்சார தூண்களை அகற்றுமாறு கோரிக்கை

மஸ்கெலியா பகுதிகளில் நீண்டகாலமாக மின்சார தூண்கள் மரத்தில் போடப்பட்டிருப்பதால், மழைகாலங்களில் என்ன நடக்குமோ என்ற அச்சத்தில் மக்கள் வாழ்ந்து வருவதால், அதனை சரிசெய்து தருமாறு மஸ்கெலியா பிரதேசசபை உறுப்பினர் ராஜ் அசோக் கோரிக்கை விடுத்துள்ளார்.

கடந்த 13 ஆம் திகதி நடைபெற்ற மஸ்கெலியா பிரதேசசபையின் மாதாந்த அமர்வில், மரத்தில் போடப்பட்ட ஆபத்தான மின்சார தூண்களை அகற்ற வேண்டும் என கோரிய பிரேரணையை மஸ்கெலியா பிரதேசசபை உறுப்பினர் ராஜ் அசோக் முன்வைத்தார்.

மேலும், மஸ்கெலியா பகுதிகளில் நீண்டகாலமாக மின்சார தூண்கள் மரத்தில் போடப்பட்டுள்ளது. அதனால் மழைகாலங்களில் என்ன நடக்குமோ என்ற அச்சத்தோடு மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.

அதனை கொங்றீட் தூண்கள் கொண்டு மாற்றவேண்டும் எனவும், கேபில்களும் போடப்பட்டு நீண்ட வருடங்கள் ஆகியதால், வயர் முறைக்கு மாற்றி கொடுக்கும்படியும் கோரிக்கை விடுத்திருந்தார்.

இதுதொடர்பில், மின்வலு அமைச்சர், இலங்கை மின்சாரசபை மற்றும் மஸ்கெலியா மின்சாரசபைற்கு கடிதம் மூலம் அறியகொடுக்கவும் தீர்மானம் எடுக்கப்பட்டது.

மேலும், நிலைமையை மஸ்கெலிய மின்சார சபை முகாமையாளரை தொடர்பு கொண்டு ராஜ் அசோக் கலந்துரையாடியபோது,
வெகு விரைவில் இதனை மாற்றி தருவதாக உறுதியளித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இப் பிரேரணை, மஸ்கெலியா சபையில் தவிசாளர், உப தவிசாளர் மற்றும் உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *