
ஆட்டமா? தேரோட்டமா? பாடலுக்கு மன்சூர் அலிகானின் துப்பாக்கி முனையில் இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு ஆடி கவனிக்க வைத்தவர் ரம்யா கிருஷ்ணன். அதே இளமையையும், அழகையையும் ரம்யா கிருஷ்ணன் இன்னும் கூட தக்கவைத்திருப்பது ஆச்சர்யமான விஷயம் தான்!
படையப்பாவில் நீலாம்பரியாக வெகுவாக ஈர்த்தவர், நீண்ட இடைவெளிக்கு பின்பு ரம்யாகிருஷ்ணன் பாகுபலியால் பரவலாக கவனிக்கப்பட்டார்.
ரம்யா கிருஷ்ணன் கடந்த 2003 ஆம் ஆண்டு பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சியை திருமணம் செய்து இருந்தார். ரம்யா கிருஷ்ணனுக்கு இப்போது 51 வயதாகிறது.
வழக்கம் போல் பிறந்தநாளுக்கு முந்தைய இரவில் வீட்டில் இருந்தார் ரம்யா கிருஷ்ணன். ஆனால் திடீர் என அவர் வீட்டுக்கு த்ரிஷா, குஷ்பு, ராதிகா, மது, ஸில்லி, அனு பார்த்தசாரதி, உமா ரியாஸ், நடிகர்நகுல், அவரது மனைவி ஸ்ருதி, சுரேஷ் சக்கரவர்த்தி ஆகியோர் விசிட் அடித்தனர்.
இவர்கள் ரம்யா கிருஷ்ணன் வீட்டில் கேக் வெட்டி அவரது பிறந்தநாளைக் கொண்டாடினர். இதை சற்றும் எதிர்பார்க்காத ரம்யா கிருஷ்ணன், இவர்களைப் பார்த்ததும் அதிர்ச்சியில் ஷாக்காகிப் போகிறார்.