
மது, புகைத்தல் பொருளுக்கு வரி விதிப்பை அதிகரியுங்கள் ஜனாதிபதியிடம் கோரும் தீர்மானத்தை நிறைவேற்றியது சாவ. பிரதேச சபை!
மதுபானத்துக்கும், புகைத்தல் பொருள்களுக்கும் கூடுதல் வரியை விதித்து அத்தியாவசியப் பொருள்களுக்கு விதிக்கப்பட்டுள்ள வரியைக் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஜனாதிபதியிடம் கோரும் பிரேரணையை நிறைவேற்றியது சாவகச்சேரி பிரதேச சபை.
சாவகச்சேரி பிரதேச சபையின் மாதாந்த அமர்வு நேற்றுமுன்தினம் காலை இடம்பெற்றது. இதன்போதே மேற்படி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
2019ஆம் ஆண்டு சிகரெட் என்ன விலையில் விற்கப்பட்டதோ அதே விலையில்தான் தற்போதும் விற்கப்படுகின்றது. எனவே 20 ரூபா வரையில் வரி விதிப்பை அதிகரித்தால் அரசுக்கு 52 பில்லியன் ரூபா இலாபம் கிடைக்கும். அதன் ஊடாக அரசின் பல தேவைகளை நிறைவேற்ற முடிவதுடன் அதிபர், ஆசிரியர்களின் சம்பளப் பிரச்சினைக்குத் தீர்வைக் காணலாம். அத்துடன் இந்த வரி அதிகரிப்பின் மூலம் சிகரெட் பாவனையாளர்களின் எண்ணிக்கை குறையவும் வாய்ப்புள்ளது – என்று தெரிவிக்கப்பட்டது.