நடிகை மீனாவின் மகள் ‘நைனிகா’ இளையதளபதி விஜய் நடித்த தெறி திரைப்படத்தில் விஜயின் மகளாக நடித்து இருந்தார். அந்தப்படம் அவருக்கு மிகவும் நல்லப்பெயரை வாங்கிக் கொடுத்தது.
தெறி திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த நைனிகா, இப்போது ஆளே அடையாளம் தெரியாமல் மாறிப் போய் இருக்கிறார். அதைப்பார்ப்பவர்கள் ‘நைனிகாவா இது?’ என கமெண்ட் செய்து வருகிறார்கள்.
மீனாவுக்கும் இது திரையுலகில் இரண்டாவது இன்னிங்ஸ் எனச் சொல்லலாம். சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாக அண்ணாத்த படத்தில் இப்போது மீனா நடித்து வருகிறார்.
நடிகை மீனாவுக்கு நேற்று பிறந்தநாள். குடும்பத்தோடு பிறந்தநாள் கொண்டாடிய மீனா, தன் மகள் நைனிகாவோடு இருக்கும் படங்களை சமூகவலைதளங்களில் பகிர்ந்துள்ளார். அதைப் பார்த்த நெட்டிசன்கள் சீக்கிரமே அடுத்த ஹீரோயின் ரெடி என கமெண்ட் செய்துவருகின்றனர்.