
பிரசவ வலியுடன் வந்த கர்ப்பிணிக்கு தொற்று சாவகச்சேரியில் சம்பவம்!
பிரசவ வேதனையுடன் சாவகச்சேரி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட கர்ப்பிணிக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் நேற்று சாவகச்சேரியில் நடந்துள்ளது.
மருத்துவமனைக்குக் கொண்டுவரப்பட்ட கர்ப்பிணிக்கு அன்டிஜென் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டபோது, அவருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா மருததுவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மிகக் குறைவான கர்ப்பிணிகளே கொரோனா தடுப்பூசி ஏற்றியுள்ளனர். ஏனையோர் வதந்திகளை நம்பி தடுப்பூசி ஏற்றாமல் உள்ளனர்.
கர்ப்ப காலத்தில் கர்ப்பிணிகள் கிளினிக்குகள், ஸ்கானிங், மகப்பேற்று நிபுணர் சந்திப்பு போன்ற இடங்களுக்கு அடிக்கடிசென்று வருவதால் தொற்றுக்கு உள்ளாகும் சந்தர்ப்பங்கள் அதிகமாக உள்ளன. இவற்றைக் கருத்தில் கொண்டு கொண்டு கர்ப்பிணிகள் அனைவரும் கொரோனாத் தடுப்பூசி ஏற்ற வேண்டும் என்று சுகாதாரத் தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

