கொக்குவில் குளப்பிட்டிச் சந்திக்கு அண்மையில் வியாபாரம் மேற்கொண்ட வியாபாரிகள், பொது மக்கள் எனப் பலருக்கு அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நாட்டில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு வரும் ஒக்டோபர் முதலாம் திகதி வரை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் வீதியில் பொதுமக்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளது.
இந்நிலையில், யாழ்ப்பாண பொலிஸார் மற்றும் நல்லூர் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவினர் இணைந்து அன்டிஜன் பரிசோதனைகளை மேற்கொண்டுள்ளனர்.
இதன்போது, சிலருக்குக் கொரோனாத் தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
இதனிடையே, நேற்று மதுபானசாலைகள் திறக்கப்பட்ட நிலையில், மதுப்பிரியர்கள் சமூக இடைவெளியை மீறி மதுபானங்களை கொள்வனவு செய்தமை குறிப்பிடத்தக்கது.
அவற்றை கண்காணிக்காத சுகாதாரப் பிரிவினரும் பொலிசாரும், சந்தை வியாபாரிகள் மீது நடவடிக்கை எடுப்பதாக அங்கு நின்ற மக்கள் விசனம் வெளியிட்டனர்.





