இங்கிரிய-பாதுக்க வீதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வீதியின் குறுக்காக பயணித்த மாடு ஒன்றுடன் முச்சக்கரவண்டி ஒன்று மோதி கவிழ்ந்து, பின்னர் டிபர் ஒன்றுடன் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இன்று புதன்கிழமை அதிகாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளதுடன் முச்சக்கரவண்டியின் ஓட்டுனர் உட்பட அதில் பயணித்த ஒருவரும் உயிரிழந்துள்ளார்.
பலங்கொட பகுதியை சேர்ந்த 35 மற்றும் 46 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் டிபர் வாகனத்தின் ஓட்டுனர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் இங்கிரிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.