வவுனியாவில் அதிக விலையில் விற்பனை செய்யப்பட்ட சீமெந்து மூடைகள் பறிமுதல்!

வவுனியாவில் நிர்ணய விலைக்கு அதிகவிலையில் விற்பனை செய்யப்பட்ட  ஒரு தொகை சீமேந்து மூடைகள், மாவட்ட பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இன்று (சனிக்கிழமை) காலை, வவுனியா- சூசைப்பிள்ளையார் குளம் வீதியில், லொறி ஒன்றின் ஊடாக விற்பனைக்காக கொண்டுவரப்பட்டிருந்த சீமேந்து மூடைகள் குறித்து, வவுனியா பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையின் உத்தியோகத்தர்கள் விசாரணையினை முன்னெடுத்திருந்தனர்.

இதன்போது, சீமேந்து மூடைகளில் அச்சிடப்பட்டிருந்த விலைக்கு அதிகமாக அவை விற்பனை செய்யப்பட்டிருந்தமை உறுதிப்படுத்தப்பட்டது.

அதனைத் தொடர்ந்து அதிக விலைக்கு விற்பனை செய்த குற்றத்திற்காக, குறித்த முகவர் மீது வழக்குத்தாக்கலினை செய்த பாவனையாளர் அதிகாரசபை, ஏனைய சீமேந்து மூடைகள் அனைத்தையும் அதன் பெறுமதிக்கேற்ப்ப நிர்ணய விலையினை முகவரிடம் செலுத்தி, மாவட்டத்தில் அமைந்துள்ள அரசாங்க திணைக்களங்களின் கட்டுமானத்தேவைக்காக பயன்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *