கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இத்தாவில் பகுதியில், இன்று மாலை விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது.
யாழ். நோக்கி வந்து கொண்டிருந்த பேருந்தும் கிளிநொச்சிச் நோக்கி சென்று கொண்டிருந்த முச்சக்கரவண்டியுமே விபத்துக்குள்ளாகியுள்ளன.
சிறிய ரக விசேட சேவை பேருந்து யாழ்.நோக்கி பணியாளர்களை ஏற்றிக்கொண்டு வந்துள்ளது.
இதன்போதே, கிளிநொச்சி நோக்கிச் சென்று கொண்டிருந்த முச்சக்கரவண்டி வேகக் கட்டுப்பாட்டை இழந்து பேருந்துடன் மோதியுள்ளது.
இந்த விபத்தின் போது முச்சக்கர வண்டி முற்றாகச் சேதமடைந்துள்ளது.
மேலும், முச்சக்கர வண்டிச் சாரதி பலத்த காயங்களுக்குள்ளானதுடன் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.





