முதலாம் திகதியுடன் ஊடரங்கு நீக்­கப்­ப­டும்!கொரோனா ஒழிப்­புச் செய­ல­ணி­யின் கூட்­டத்­தில் தீர்­மா­னங்­கள்!

முதலாம் திகதியுடன் ஊடரங்கு நீக்­கப்­ப­டும், அது­வ­ரை­யான 10 நாள்­க­ளும் ஊர­டங்கு நீடிப்பு, மாண­வர்­க­ளுக்கு பைஸர் தடுப்­பூசி, நாள்­பட்ட நோயுள்ள மாண­வ­ருக்கு முன்­னு­ரிமை, பாட­சா­லை­க­ளைத் திறக்க இணைந்து பணி­யாற்­ற­வும், ஜனா­தி­பதி தலை­மை­யி­லான கூட்­டத்­தில் தீர்­மா­னங்­கள்.

நாடு முழு­வ­தும் நடை­மு­றை­யில் உள்ள தனி­மைப்­ப­டுத்­தல் ஊர­டங்­குச் சட்­டம், எதிர்­வ­ரும் முத­லாம் திகதி அதி­காலை 4 மணி­வரை நீடிக்­கப்­பட்­டுள்­ளது. எனி­னும், அன்­றை­ய­தி­னத்­து­டன் தனி­மைப்­ப­டுத்­தல் ஊர­டங்­குச் சட்­டம் நீக்­கப்­பட்­டு­வி­டும். அதற்­குப் பின்­னர் தனி­மைப்­ப­டுத்­தல் ஊர­டங்கு நீடிக்­காது– என்று ஜனா­தி­பதி ஊட­கப் பிரிவு நேற்­றுத் தெரி­வித்­தது.
கொரோனா ஒழிப்­புச் செய­ல­ணி­யின் விசேட கூட்­டம் ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜ­பக்ச தலை­மை­யில், வீடியோ தொழில்­நுட்­பத்­தி­னூ­டாக நேற்று நடை­பெற்­றது. அதில் இந்­தத் தீர்­மா­னம் எடுக்­கப்­பட்­டது. தனி­மைப்­ப­டுத்­தல் ஊர­டங்­குச் சட்­டம் எதிர்­வ­ரும் 21ஆம் திகதி அதி­காலை 4 மணி­வரை நீடிக்­கப்­பட்­டி­ருந்­த­நி­லை­யி­லேயே, அது முத­லாம் திக­தி­வரை மேலும் நீடிக்­கப்­பட்­டுள்ளது.

நேற்­றைய கூட்­டம் தொடர்­பில் ஜனா­தி­பதி ஊட­கப் பிரி­வின் அறிக்­கை­யில் மேலும் குறிப்­பி­டப்­பட்­டுள்­ள­தா­வது:
நாட்­டின் நிலை­மை­யைக் கருத்­திற்­கொண்டே, நடை­மு­றை­யில் இருக்­கும் தனி­மைப்­ப­டுத்­தல் ஊர­டங்­குச் சட்­டத்தை, ஒக்­ரோ­பர் மாதம் முத­லாம் திக­தி­யு­டன் நீக்­கு­வ­தற்கு அரசு திட்­ட­மிட்­டுள்­ளது.

மாண­வ­ர்களுக்கு தடுப்­பூசி
இந்­தக் கூட்­டத்­தின்­போது, பிள்­ளை­க­ளுக்­கான தடுப்­பூசி ஏற்­றல் வேலைத்­திட்­டம் தொடர்­பில் ஜனா­தி­பதி கேள்வி எழுப்­பி­னார். அதற்­குப் பதி­ல­ளித்து உரை­யாற்­றிய சுகா­தா­ர சேவை­கள் பணிப்­பா­ளர் நாய­கம் விசேட மருத்­துவ நிபு­ணர் அசேல குண­வர்­தன, “நாள்­பட்ட நோய்­க­ளால் பீடிக்­கப்­பட்­டுள்ள 12 தொடக்­கம் 19 வய­துக்­கி­டைப்­பட்ட சிறு­வர்­க­ளுக்கு, முன்­னு­ரிமை அடிப்­ப­டை­யில் தடுப்­பூசி ஏற்­று­மாறு, விசேட சுகா­தார நிபு­ணர்­கள் குழு பரிந்­துரை செய்­துள்­ளது” என்­றார். அத்­து­டன், “சிகிச்­சை­யக (கிளி­னிக்) விசேட மருத்­துவ நிபு­ணர்­க­ளின் கண்­கா­ணிப்­பின்­கீழ், பெற்­றோர்­க­ளின் அனு­ம­தி­யு­டன், அந்­தச் சிகிச்­சை­ய­கங்­க­ளுக்­குள் வைத்து மாத்­தி­ரம் மேற்­படி சிறு­வர்­க­ளுக்கு தடுப்­பூசி ஏற்­றத் திட்­ட­மி­டப்­பட்­டுள்­ளது.

உல­கின் ஏனைய நாடு­க­ளில்­கூட 12 – 15 வய­துக்­கி­டைப்­பட்ட ஆரோக்­கி­ய­மான சிறு­வர்­க­ளுக்­கு­ரிய தடுப்­பூசி ஏற்­றல் தொடர்­பில், இது­வ­ரை­யில் நட­வ­டிக்கை மேற்­கொள்­ளப்­ப­ட­வில்லை. இருப்­பி­னும், 15 தொடக்­கம்19 வய­துக்­கி­டைப்­பட்ட அனைத்­துச் சிறு­வர்­க­ளுக்­கு­மான தடுப்­பூசி ஏற்­ற­லுக்­கு­ரிய பரிந்­துரை கிடைக்­கப்­பெற்­றுள்­ளது என்று தெரி­வித்­தார்.
இதன்­படி, நாட்­டி­லுள்ள 15 தொடக்­கம் 19 வய­துக்கு இடைப்­பட்ட அனைத்­துச் சிறு­வர்­க­ளுக்­கு­மான தடுப்­பூசி ஏற்­றலை விரை­வு­ப­டுத்தி முடிக்­கு­மா­றும் மருத்­து­வ­ம­னை­க­ளுக்­குள் வைத்து மாத்­தி­ரம் அவர்­க­ளுக்­கான தடுப்­பூசி ஏற்­றலை முன்­னெ­டுக்­கு­மா­றும், ஜனா­தி­பதி ஆலோ­சனை வழங்­கி­னார்.

அத்­து­டன், அது தொடர்­பில் அந்­தச் சிறு­வர்­க­ளின் பெற்­றோ­ருக்­குத் தெளி­வு­ப­டுத்­து­வ­தன் அவ­சி­யத்­தை­யும், ஜனா­தி­பதி எடுத்­து­ரைத்­தார்
விசேட மருத்­துவ குழு­வின் பரிந்­து­ரைக்­க­மைய, அனைத்­துச் சிறு­வர்­க­ளுக்­கும், பைஸர் தடுப்­பூ­சியை மாத்­தி­ரம் ஏற்­று­மா­றும், ஜனா­தி­பதி ஆலோ­சனை வழங்­கி­னார்.

இளை­யோ­ருக்­கென
விசேட தடுப்­பூசி இல்லை
தெரி­வு­செய்­யப்­பட்ட தடுப்­பூ­சி­களை மாத்­தி­ரமே இளை­ஞர் – யுவ­தி­கள் எதிர்­பார்க்­கும் நிலைமை தோன்­றி­யுள்­ளது. அவர்­க­ளுக்­கென விசேட தடுப்­பூ­சி­யொன்று அறி­மு­கப்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை. நாட்டு மக்­க­ளுக்கு ஏற்­றப்­ப­டும் தடுப்­பூ­சி­கள் அனைத்­தும் தரம்­வாய்ந்­தவை என்று விசேட மருத்­துவ நிபு­ணர் பிர­சன்ன குண­சேன மற்­றும் பேரா­சி­ரி­யர் நீலிகா மல­விகே ஆகி­யோர் எடுத்­து­ரைத்­த­னர். அத­னால், விசேட தடுப்­பூ­சி­யொன்று கிடைக்­கும் வரை காத்­தி­ருக்­காது, அனை­வ­ரும் தடுப்­பூசி ஏற்­றிக்­கொள்ள முன்­வர வேண்­டு­மென்­றும் வலி­யு­றுத்­தி­னர்.

ஆயுள்­வேத வைத்­தி­ய­சா­லை­க­ளில்
கொரோனா சிகிச்சை நிலை­யம்
சிக்­கல் நிலை­யு­டன்­கூ­டிய கொரோனா நோயா­ளி­க­ளுக்கு ஆயுள்­வேத சிகிச்­சை­ய­ளிப்­ப­தன் முக்­கி­யத்­து­வம் பற்­றி­யும் இதன்­போது கலந்­து­ரை­யா­டப்­பட்­டது. அதற்­காக, கிரா­மிய ஆயுள்­வேத வைத்­தி­ய­சா­லை­க­ளில், கொரோனா சிகிச்சை நிலை­யங்­களை உரு­வாக்­கு­வது தொடர்­பி­லும் அவ­தா­னம் செலுத்­தப்­பட்­டது.

மோட்­டார் திணைக்­கள
பணி­க­ளைத் தொட­ர­வும்
மோட்­டார் போக்­கு­வ­ரத்­துத் திணைக்­க­ளம், காணிப் பதிவு அலு­வ­ல­கம் போன்ற அத்­தி­யா­வ­சி­யச் சேவை­க­ளைப் பொது­மக்­க­ளுக்கு வழங்­கும் நிறு­வ­னங்­க­ளின் பணி­க­ளை­ தொடர்ந்து முன்­னெ­டுக்க வேண்­டி­ய­தன் அவ­சி­யத்­தை­யும் எடுத்­து­ரைத்த ஜனா­தி­பதி, இது தொடர்­பில் அந்­த­ நி­று­வ­னங்­க­ளின் தலை­வர்­கள், உரிய தீர்­மா­னங்­களை மேற்­கொள்ள வேண்­டு­மென்­றும் வலி­யு­றுத்­தி­னார்.

பொரு­ளா­தார அபி­வி­ருத்தி
உயர்­நி­லை­யில் பேணப்­ப­டு­கி­றது
நில­வும் சவால்­மிக்க நிலை­மைக்கு மத்­தி­யி­லும், ஆண்­டின் முத­லா­வது மற்­றும் இரண்­டா­வது காலாண்­டு­க­ளில், நாட்­டின் பொரு­ளா­தார அபி­வி­ருத்­தி­யின் வேகத்தை உயர்ந்த பட்­சத்­தில் பேண முடிந்­துள்­ளது எனக் கூறிய நிதி அமைச்­சர் பசில் ராஜ­பக்ச அவர்­கள், அதற்­காக அர்ப்­ப­ணிப்­பு­டன் பணி­யாற்­றிய சுகா­தார, பாது­காப்பு உள்­ளிட்ட அனைத்­துத் துறை­யி­ன­ருக்­கும் நன்றி தெரி­வித்­தார்.

மக்­க­ளின் இயல்பு வாழ்க்கை மற்­றும் பொரு­ளா­தார வழி­கள் என்­பன எக்­கா­ர­ணங்­கொண்­டும் பாதிக்கப்படாத வகை­யில், அத்­தி­யா­வ­சி­ய சேவை­களை முன்­னர் போன்று தொடந்து முன்­னெ­டுக்­கு­மாறு ஆலோ­சனை வழங்­கிய ஜனா­தி­பதி, அனைத்­துப் பொரு­ளா­தார மத்­திய நிலை­யங்­க­ளை­யும் தொடர்ந்து திறந்­து­வைக்க நட­வ­டிக்கை எடுக்­கு­மா­றும் அறி­வு­றுத்­தி­னார்.

பாட­சா­லை­க­ளைத் திறக்க
இணைந்து பணி­யாற்­ற­வும்
200க்கும் குறை­வான மாண­வர் கொள்­ள­ள­வைக் கொண்­டுள்ள கிரா­மிய பாட­சா­லை­க­ளைத் திறப்­பது தொடர்­பி­லும், கூட்­டத்­தின் போது விசேட அவ­தா­னம் செலுத்­தப்­பட்­டது. இது விட­யத்­தில், மாகாண சுகா­தா­ரப் பணிப்­பா­ளர்­கள் அனை­வ­ரும், கல்வி அமைச்­சு­டன் இணைந்­துப் பணி­யாற்ற வேண்­டி­ய­தன் அவ­சி­யத்­தை­யும், ஜனா­தி­பதி எடுத்­து­ரைத்­தார். சுகா­தார அமைச்சு மற்­றும் கல்வி அமைச்சு ஆகி­யன இணைந்து, பெற்­றோர்­கள் மற்­றும் பிள்­ளை­க­ளுக்­கான சுகா­தார வழி­காட்­டு­தல்­கள் பற்­றிய தெளி­வு­ப­டுத்­தல்­களை வழங்க வேண்­டு­மென்­றும், இதன்­போது எடுத்­து­ரைக்­கப்­பட்­டது. – என்­றுள்­ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *