பொகவந்தலாவை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கொம்பியன் நகரிலிருந்து, கொம்பியன் தோட்ட பகுதிக்கு கொண்டு செல்லப்பட்ட 175 மில்லி லீற்றர் கொள்ளளவு கொண்ட 150 மதுபான போத்தல்களுடன் ஒருவரை கைது செய்துள்ளதாக பொகவந்தலாவை பொலிஸார் தெரிவித்தனர்.
தோட்டப் பகுதிகளில் அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காகவே இந்த மதுபான போத்தல்களைக் கொண்டு சென்றுள்ளனர்.
மேலும், கைது செய்யப்பட்ட நபரை பிணையில் விடுதலை செய்துள்ளமையுடன், வழக்கு பதிவு செய்து ஹற்றன் மாவட்ட நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.





