வவுனியா, ஓமந்தைப் பகுதியில் உள்ள பிள்ளையார் ஆலயத்தில் சுகாதார அறிவுறுத்தல்களை மீறி கும்பாபிஷேகம் இடம்பெற்றுள்ளது.
வவுனியா, ஓமந்தை, நொச்சிக்குளம் சித்திவிநாயகர் ஆலயத்தில் கும்பாபிஷேகம் நடத்துவதற்கு ஆலய நிர்வாகத்தினரால் சுகாதாரப் பிரிவினரிடம் அனுமதி கோரப்பட்டிருந்தது.
தற்போதைய கொரோனா நிலையை கருத்தில்கொண்டு ஆலய நிர்வாகத்தினர் மற்றும் உபயகாரர் என 9 பேருக்கே சுகாதாரப் பிரிவினர் அனுமதி வழங்கியிருந்தனர்.
ஆனால், ஆலயத்தில் 20 பேருக்கு மேல் நிற்பதாகவும், சுகாதார நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை எனவும் சுகாதாரப் பிரிவினருக்கு கிடைத்த முறைப்பாட்டை அடுத்து, அங்கு சென்ற சுகாதாரப் பரிசோதகர்கள் ஆலயத்தில் நின்ற 20 பேரிடமும் அன்டிஜன் பரிசோதனை மேற்கொண்டனர்.
அதில், ஆலய குருக்கள் உட்பட 6 பேர் தொற்றாளர்களாக இனங்காப்பட்டுள்ளனர்.
இதையடுத்து, தொற்றாளர்களும், அவர்களுடன் தொடர்புடையவர்களும் சுகாதாரப் பிரிவினரால் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.


