மஸ்கெலியா, டிசைட் தோட்டத்திலிருந்து இரண்டு கறவை பசுக்களை அனுமதிப்பத்திரமின்றி, பார ஊர்தியில் கொண்டுசென்ற இருவர் இன்று அதிகாலை 4.30 மணியளவில் கைது செய்யப்பட்டுள்ளதாக மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி யசரத்ன பண்டார தெரிவித்துள்ளார்.
மேலும், கறவைப் பசுக்களையும், ஏற்றி வந்த வார ஊர்தியையும், கைப்பற்றி மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்துள்ளனர்.
எதிர்வரும் திங்கட்கிழமை ஹற்றன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக மஸ்கெலியா பொலிஸ் நிலைய அதிகாரி தெரிவித்துள்ளார்.





