மேலும் 18 சிறார் நீதிமன்றகளை அமைக்க தீர்மானம்

சிறுவர்களுக்கான 18 சிறார் நீதிமன்றங்களை அமைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்று தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் பிரதித் தலைவர் சுஜாதா அலஹப்பெரும தெரிவித்துள்ளார்.

‘சிறுவர் துஷ்பிரயோகம், குழந்தைகளுக்கு எதிரான வன்முறை மற்றும் ஊடகங்களின் சமூக பாதிப்பு’ குறித்து அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

நாட்டின் ஒன்பது மாகாணங்களை உள்ளடக்கிய சிறுவர் நீதவான் நீதிமன்றங்கள் ஒன்பதையும் மற்றும் சிறுவர் மேல் நீதிமன்றங்கள் ஒன்பதையும் ஸ்தபிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

தற்போது கொழும்பு, பத்தரமுல்லை மற்றும் யாழ்ப்பாணத்தில் இரண்டு சிறுவர் நீதவான் நீதிமன்றங்கள் மட்டுமே உள்ளன.

எனினும் அவை போதுமானதாக இல்லை.

குறித்த நீதிமன்றங்களில் அதிக எண்ணிக்கையிலான வழக்குகள் இருப்பதால் வழக்குகளை ஒத்திவைக்கும் போக்கு காணப்படுகிறது என்றும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *