
யாழ்.போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் 49 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் 200 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் யாழ்.மாவட்டத்தில் 27 பேர் உட்பட வடக்கு மாகாணத்தில் 49 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அவர்களில், யாழில், 91 வயதுடைய சரவணை முத்துலிங்கம், 41 வயதுடைய T.சந்திரகாசன் ஆகியோரும், கிளிநொச்சியில், 63 வயதுடைய சின்னையா கணபதிப்பிள்ளை, 82 வயதுடைய கறுப்பையா ஆறுமுகம் ஆகிய நான்கு பேர் உள்ளடங்குவதாகவும் மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், யாழ்.மாவட்டத்தில் 27 பேருக்கும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 09 பேருக்கும், கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் 02 பேருக்கும், மன்னார் மாவட்ட வைத்தியசாலையில் 02 பேருக்கும், வவுனியா மாவட்டத்தில் 09 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.




