யாழ்ப்பாணம், நீர்வேலிப் பகுதியில் விபத்தில் சிக்கி, 24 வயதுடைய டிலக்சன் என்னும் இளைஞர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம், பருத்தித்துறை வீதியில் நீர்வேலிச் சந்திக்கு அண்மித்த பகுதியில் ஞான வைரவர் ஆலயம் முன்பாக நேற்று இரவு அதிவேகமாக பயணித்த மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்து மதில் சுவருடன் மோதியுள்ளது.
மதில் சுவரில் காணப்பட்ட கம்பி இளைஞரின் மார்பில் குத்தியுள்ளதாக தெரியவருகிறது.
படுகாயம் அடைந்தவர், வீதியில் பயணித்தவர்களால் மீட்கப்பட்டு யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
எனினும், அவர் உயிரிழந்தார் எனத் தெரியவந்துள்ளது.





