மட்டக்களப்பு, போரதீவுப்பற்று பிரதேசத்தில் தொடர்ச்சியாக காட்டு யானையின் தொல்லையால் மக்கள் அவதிப்படுவதுடன், பொருளாதாரத்தையும் இழந்து வருகின்றனர்.
போரதீவுப்பற்று பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட 37ஆம் கிராமம், நெல்லிக்காடு ஆகிய பகுதிகளில் நேற்று, காட்டு யானைகள், மக்களின் வாழ்வாதார தொழிலாகிய மரவள்ளி சேனையையும், தென்னைகளும் முற்றாக அழித்துள்ளது.
அத்தோடு, மக்களின் குடி மனைகளையும் உடைப்பதுடன், உயிர்களுக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுவதாக, கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.
இதுதொடர்பில், அதிகாரிகள் பலதடவைகள் வந்து பார்வையிட்டு செல்கின்றபோதிலும், எந்தவித நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவில்லை எனவும் மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
எனவே, காட்டுயானைகளிடம் இருந்து, வீடுகளையும், விவசாயம், சேனைப்பயிர்ச்செய்கை போன்றவற்றையும் பாதுகாக்கும் வகையில் நடவடிக்கை எடுக்குமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.





