
31 வருட கல்விச்சேவையில் இருந்து அதிபர் குலசேகரம் வரதநாதன் ஓய்வு

(துறைநீலாவணை நிருபர் செல்லையா பேரின்பராஜா)
கல்முனை மணற்சேனை சுவாமி விபுலாநந்த வித்தியாலய அதிபராக பணியாற்றிய குலசேகரம் வரதநாதன்; அண்மையில் (03.09.2021) தனது கவ்விச்சேவையில இருந்து ஓய்வுபெற்றுள்ளார்.
20.03.1990 இல் ஆசிரிய நியமனம் பெற்ற இவர் விஞ்ஞான பாட ஆசிரியராக நாவிதன்வெளி அன்னமலை மகாவித்தியாலயம் நற்பிட்டிமுனை சிசிவக்தி மனாவித்தியாலயம் சேனைக்குடியிருப்பு கணேஷா மகாவித்தியாலயம் பெரிய நீலாவணை விஷ்ணு மகாவித்தியாலயம் கல்முனை ஸ்ரீ மாமாங்க வித்தியாலயம் என்பவற்றிவல் பணியாற்றியுள்ளார்.
26.01.2012 ஆந் திகதி இலங்கை அதிபர் சேவைக்கான போட்டிப்பரீட்சையில் சித்தியடைந்து அதிபர் சேவைக்குள் உள்வாங்கப்பட்ட இவர் காரைதீவு சண்முகா மகாவித்தியாலயத்தில் ஏழு வருட காலம் பிரதி அதிபராக பணியாற்றினார். இதனை தொடர்ந்து 01.01.2019 இல் கல்முனை மணற்சேனை சுவாமி விபுலாநந்த வித்தியாலயத்pல் பொறுப்பு அதிபராக பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார்.
நற்பிட்டிமுனை சிவசக்தி வித்தியாலயத்தில் ஆசிரியராக பணியாற்றியவேளையில் காலஞ்சென்ற அதிபர் நாகமணியுடன் இணைந்து இப்பாடசாலையை மகாவித்தியாலயமாக தரமுயர்த்துவதற்கு அயராது உழைத்து வெற்றி கண்டவர். மேலும் 2004 ஆம் ஆண்டு சுனாமி பேரலையின் போது கடல் காவுகொண்ட கல்முனை ஸ்ரீ மாமாங்க வித்தியாலயத்தை புதிய இடத்தில் அமைப்பதற்கு பாடசாலை சமூகத்துடன் இணைந்து நிறைவான பங்களிப்பை நல்கியவர்.
இவை தவிர வறிய மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களை தனது சொந்த நிதியில் வழங்கி அவர்களை கற்றலில் ஊக்கப்படுத்தியுள்ளார். இவரின் ஓய்வு காலம் சிறப்பாக அமைய இறைவனை பிரார்த்திப்போம்.




