கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட 9 வயது சிறுவனின் சடலம்!

தம்புத்தேகம – குருகம பிரதேசத்தில் பட்டம் விட்டுக்கொண்டிருந்த 9 வயது சிறுவன் ஒருவர் பாதுகாப்பற்ற விவசாய கிணறு ஒன்றில் விழுந்து உயிரிழந்துள்ளார்.

இந்த சிறுவன் நேற்று மாலை பட்டம் விட்டுக்கொண்டிருந்த போது சுமார் 20 அடி ஆழமான கிணறு ஒன்றில் விழுந்து உயிரிழந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

சிறுவன் வீடு திரும்பாததையடுத்து அவரது பெற்றோர் மேற்கொண்ட தேடுதலின்போது, கிணற்றில் இருந்து குறித்த சிறுவன் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *