திஸ்ஸமஹராம சதுன்கம, முதியம்மாகம பகுதியில் முச்சக்கரவண்டி ஒன்று லொறிய ஒன்றுடன் மோதியதில் பெண் ஒருவர் உட்பட இருவர் உயிரிழந்துள்ளனர்.
முச்சக்கரவண்டி வலது பக்கத்திற்கு திருப்ப முற்பட்ட சந்தர்ப்பத்தில், எதிரில் வந்த லொறி ஒன்றுடன் மோதி அருகில் இருந்த மதிலில் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
மேலும், முச்சக்கரவண்டியில் பயணித்த இருவரும் பலத்த காயங்களுடன் தெபரவெவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
எனினும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர் எனத் தெரியவருகின்றது.





