2021 ஜனவரி முதல் ஜூலை வரை நீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரியத்திற்கு செலுத்தவேண்டிய சுமார் 842 மில்லியன் நீர்க் கட்டணம் செலுத்தப்படவில்லை என நீர் வாரியம் தெரிவித்துள்ளது.
இதனால், நீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரியம் கடுமையான நிதி நெருக்கடியை எதிர்கொள்கிறது என நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைச்சகத்தின் செயலாளர் பிரியத் பந்து விக்கிரமா தெரிவித்துள்ளார்.
மேலும், கொரோனா காரணமாக நிலுவைத் தொகையை செலுத்தாதவர்களுக்கு நீர் வழங்கல் இன்னும் துண்டிக்கப்படவில்லை எனவும் தெரிவித்தார்.
இந்த மாத இறுதிக்குப் பின் நீர்க் கட்டணம் செலுத்தாதவர்களுக்கு இறுதி சிவப்பு அறிக்கை வழங்க தீர்மானித்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.





