நீண்ட விடுமுறை: பயணக் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்படுமா?

வார இறுதியில் நீண்ட விடுமுறை இருந்தாலும் பயணக் கட்டுபாடுகளை விதிப்பதற்கு எவ்விதமான தீர்மானங்களையும் எடுக்கவில்லை என, தேசிய கொரோனா தடுப்பு செயலணியின் பிரதானியான இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் மாகாணங்களுக்கு இடையிலான பயணக்கட்டுப்பாடுகள் தொடர்ச்சியாக அமுலில் இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

நாடளாவிய ரீதியில் கொரோனா தொற்றாளர்கள் 20 ஆயிரம் பேர் சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.

நாளொன்கு தொற்றாளர்கள் ஆயிரத்து 500 பேர் எனும் வீதத்தில் இனங்காணப்படுகின்றனர்.

இந்த நிலைமையின் கீழ் சிந்தித்து செயலாற்ற வேண்டும்.

அவ்வாறு இல்லையேல் ஆபத்து ஏற்படும்.

நாட்டில் வரையறுக்கப்பட்ட சில பகுதிகளும் பிரதேசங்கள் மட்டுமே முடக்கப்பட்டுள்ளன.

அத்துடன் தடுப்பூசியை ஏற்றும் செயற்பாடுகளும் துரிதப்படுத்தப்பட்டுள்ளன என இராணுவத் தளபதி மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *