தற்போது நாடு முழுவதும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுலில் உள்ள நிலையில்
அரசாங்கத்தின் அனுமதியுடனே நாடு முழுவதும் மதுபான விற்பனை நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.
அவர் இது தொடர்பாக மேலும் தெரிவிக்கையில்
மதுபானசாலைகள் மூடியுள்ளதால் சட்டவிரோதமான முறையில் கசிப்புகளை தயாரிப்பது நாட்டில் பரவலாக உள்ளதாகவும், மக்கள் அதைப் குடிப்பதனால் உடல்நலம் கெட்டு நோய்வாய்படுவதாகவும் இதனால் மக்களின் நலன் கருதியே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும் களுத்துறையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு ஊடகவியாளரின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார் .





