Microsoft Exchange Servers மீதான சைபர் தாக்குதல்களுக்கு சீனாவே காரணம் என அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியன குற்றஞ்சாட்டியுள்ளன.
இந்த ஆண்டின் ஆரம்பத்தில் மிகப்பெரிய அளவில் சைபர் தாக்குதல்களை சீனா நடத்தியுள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இந்த சைபர் தாக்குதலில் Microsoft Exchange இலக்கு வைக்கப்பட்டுள்ளதுடன், உலகளவில் குறைந்தபட்சம் 30 ஆயிரம் நிறுவனங்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது.
Advertisement
சீன அரசின் ஆதரவுடன் செயற்பட்டவர்களே இந்த தாக்குதலுக்கு பொறுப்பானவர்கள் என பிரித்தானியா கூறியுள்ளது.
இதேவேளை, சீனாவில் இருந்தே இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் குற்றஞ்சாட்டியுள்ளது.
விரிவான உளவு செயற்பாடு மற்றும் பொறுப்பற்ற நடத்தையின் விரிவான வடிவமாக சீன உள்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் விளங்குவதாகவும் இந்த நாடுகள் கூறியுள்ளன.
அனைத்து வித சைபர் தாக்குதல் விவகாரத்தில் தங்களுடைய நாடு மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளை சீனா ஏற்கெனவே நிராகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.