துபாயில் நடைபெறும் காஸ்டெக் மாநாட்டில் உலகின் கவனத்தை ஈர்க்க செல்லும் உதயன் கம்மன்பில!

இந்த மாதம் 21 மற்றும் 23 ஆம் திகதிகளில் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் துபாயில் உள்ள உலக வர்த்தக மையத்தில் நடைபெறும் GASTEC மாநாட்டில் கலந்து கொள்ள போவதாக எரிபொருள் சக்திஅமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

மேலும் 2050 க்குள் கார்பன் உற்பத்தி பயன்பாட்டினை குறைத்து ஹைட்ரஜனை எரிபொருளாகப் பயன்படுத்துவதற்கான கொள்கைகளை விரைவுபடுத்துவது தொடர்பாக குறித்த மாநாட்டில் அமைச்சர் உரையாற்றுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு இலங்கைக்கு நீண்ட கால கடன் அடிப்படையில் பெட்ரோலியம் வாங்குவது குறித்து எரிசக்தி அமைச்சர் உதயன் கம்மன்பில , ஐக்கிய அரபு எமிரேட்ஸ் எரிசக்தி அமைச்சர் உட்பட பல தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் காஸ்டெக் மாநாட்டிற்குப் பிறகு ஈரானுக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை அமைச்சர் உதயன் கம்மன்பில மேற்கொள்ள உள்ளதாகவும் மேலதிக தகவல்கள் கிடைத்துள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *